எகிப்தின் வடகிழக்குப் பகுதியிலுள்ள இஸ்மாயிலியா பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது.
வெளிநாட்டு ஊடகங்களின்படி, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆகப் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம், தரை மட்டத்திற்குக் கீழே 5.47 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எகிப்தின் தலைநகரான கெய்ரோ உட்பட பல நகரங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், உயிரிழப்புகள் அல்லது சொத்து சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
















