குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப்புதைகுழி தொடர்பான வழங்கு விசாரணை எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.
1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தொடர்புடைய வழக்கு விசாரணை இன்று மாலை (05.08.2026) களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றில் அழைக்கப்பட்டிருந்தது.
குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு இன்று களுவாஞ்சிகுடி நீதவான் நீதி மன்றில் மேலதிக விசாரணைகளுக்காகவும், வழக்கு மாநாட்டுக்காகவும் அழைக்கப்பட்டிருந்தது.
கடந்த தவணையிலே சோகோ, பிரதான சட்ட வைத்திய அதிகாரி, மட்டக்களப்பு காணி பதிவாளர், பிரதேச செயலாளர், தொல்லியல் திணைக்களம், அதேபோன்று காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்திற்கும் அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் இன்றயதினம், காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்தின் சார்பாக அவர்களது சட்டத்தரணி பிரசன்னமாகியிருந்தார்.
ஏனையவர்கள் மன்றுக்குச் சமூகமளித்திருக்கவில்லை.
அந்தவகையிலே இந்த வழக்கு எதிர்வரும் 24 ஆம் திகதி மேலதிக நடவடிக்கைகளுக்காகவும், வழக்கு மாநாட்டுக்காகவும், தவணையிடப்பட்டுள்ளது.












