நாயாறு கடற்கரையில் நீந்தச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் அச்சுவெளி பகுதியைச் சேர்ந்த 51 வயது நபர் ஆவார்.
கனடாவில் வசித்து வந்த குறித்த நபர் இலங்கைக்கு வந்து குடும்பத்தினர், நண்பர்கள் குழுவுடன் சுற்றுலா சென்றிருந்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.














