இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர்
மஹீல் சேனாரத்ன இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் மீன் விற்பனை நிலையங்களை அமைத்தல் மற்றும் பராமரித்தல் தொடர்பான நடவடிக்கைகளில் முறையான கொள்முதல் நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னாள் மீன்பிடித் துறை அமைச்சர் ரஜித சேனாரத்னவின் சகோதரரான மஹீல் சேனாரத்ன, 2010 முதல் 2012 வரை இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவராகப் பணியாற்றினார்.














