சமூக ஊடகங்களில் வெளியாகும் போலியான மற்றும் உறுதிப்படுத்தப்படாத பதிவுகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
இலங்கையின் கணினி குற்றங்கள் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டக்கோவை ஆகியவற்றின் கீழ் இத்தகைய குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான (ASP) எஃப். யு. வுட்லர் (F. U. Wootler) தெரிவித்தார்.
இத்தகைய போலியான மற்றும் உறுதிப்படுத்தப்படாத செய்திகளால் பொது மக்களை தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.















