எரிபொருள் விலை அண்மையில் உயர்த்தப்பட்ட போதிலும், தற்போதைய நிலையில் பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணங்களை மாற்றியமைக்கப் போவதில்லை என அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சங்கம் அறிவித்துள்ளது.
எரிபொருள் விலை உயர்வால் பாடசாலை போக்குவரத்து சேவைகளைத் தொடர்ந்து நடத்துவதில் சிரமங்கள் ஏற்பட்டிருந்தாலும், பெற்றோர்கள் மீது மேலதிக நிதிச் சுமையை சுமத்த சங்கம் விரும்பவில்லை என்று அதன் தலைவர் மல்ஸ்ரீ டி சில்வா தெரிவித்தார்.
டீசல் விலை குறைக்கப்பட்டால், அதன் பலனை மாணவர்களின் பெற்றோர்களுக்குக் கிடைக்கச் செய்வோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.















