மேல் மாகாணத்திற்கு உடன் அமுலாகும் வகையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
எனினும் இன்று ( சனிக்கிழமை ) காலை 6.00 மணிக்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்
மிரிஹான பெங்கிரிவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி இல்லத்திற்கு அருகில் நேற்றிரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் காரணமாக இவ்வாறு காவற்துறை ஊரடங்கு சட்டம் உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.















