தெலுங்கானா மாநிலத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் 14 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வீட்டு உபயோக மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.
வீட்டு உபயோக மின் கட்டணம் 50 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு 1.45 ரூபாயில் இருந்து 1.95 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 51 யூனிட் முதல் 100 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு 2.60 ரூபாயில் இருந்து 3.10 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
மின் கட்டண உயர்வு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் தெலங்கானா மாநில அரசு அறிவித்துள்ளது.



















