• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் கனடா
அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி பாதுகாப்பானது: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

கனேடியத் தேர்தலில் சீனா தலையிட முயற்சிப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டு!

Anoj by Anoj
2022/11/08
in கனடா
69 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கனேடியத் தேர்தலில் சீனா தலையிட முயற்சிப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ளார்.

சீனா ஜனநாயக நாடுகளுடன் ஆக்கிரமிப்பு விளையாட்டுகளை விளையாடுவதாகவும் கனேடிய நிறுவனங்களை குறிவைப்பதாகவும் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.

கனேடிய உளவுத்துறை, சமீபத்திய தேர்தல்களில் சீனா ஆதரவு வேட்பாளர்களின் இரகசிய வலையமைப்பை அடையாளம் கண்டதாக உள்ளூர் ஊடக அறிக்கை வந்துள்ளது.

2019ஆம் ஆண்டு ஃபெடரல் தேர்தலில் சீனாவால் குறைந்தது 11 வேட்பாளர்கள் ஆதரித்ததாக அதிகாரிகள் ட்ரூடோவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பெயரிடப்படாத உளவுத்துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி, உள்ளூர் ஒளிபரப்பு குளோபல் நியூஸ், பெய்ஜிங் வேட்பாளர்களுக்கு நிதி வழங்கியதாகவும், சீன செயற்பாட்டாளர்கள் பல வேட்பாளர்களுக்கு பிரச்சார ஆலோசகர்களாக செயல்பட்டதாகவும் அறிவித்தது.

ஒரு வழக்கில், ஒன்ராறியோவை தளமாகக் கொண்ட ஒரு மாகாண எம்.பி. அலுவலகம் மூலம் 250,000 கனேடிய டொலர்கள் நிதி வழங்கப்பட்டது.

டொராண்டோவில் உள்ள சீனத் தூதரகத்திலிருந்து இயக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த நடவடிக்கை, கொள்கையில் செல்வாக்கு செலுத்தும் முயற்சியில் பணியாற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களுக்குள் செயல்படும் நபர்களை வைக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

மேலும் அரசியல் வட்டாரங்களுக்குள் செல்வாக்கு பெறும் முயற்சியில் முன்னாள் கனேடிய அதிகாரிகளை ஒத்துழைத்து ஊழல் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த குறுக்கீடு பெரிய அரசியல் கட்சிகளான ட்ரூடோவின் லிபரல் கட்சி மற்றும் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி ஆகிய இரு கட்சிகளையும் குறிவைத்ததாக நம்பப்படுகிறது. எனினும், இந்த திட்டம் வெற்றிகரமாக நடந்ததா என்பது தெரியவில்லை.
கனடாவில் உள்ள சீன அதிகாரிகள் குற்றச்சாட்டுகள் குறித்து குளோபல் நியூஸின் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை.

ட்ரூடோ இச்சம்பவம் தொடர்பாக கூறுகையில், ‘எங்கள் தேர்தல் செயல்முறைகள் மற்றும் அமைப்புகளின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்த நாங்கள் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளோம், மேலும் தேர்தல் குறுக்கீடுகளுக்கு எதிரான போராட்டத்தில், நமது ஜனநாயகம் மற்றும் நிறுவனங்களின் வெளிநாட்டு தலையீட்டிற்கு எதிராக தொடர்ந்து முதலீடு செய்வோம்’ என கூறினார்.

கனேடிய மண்ணில் சீனா அதிகாரப்பூர்வமற்ற ‘காவல்துறை’ நிலையங்களைத் திறந்தது என்ற குற்றச்சாட்டுகளை விசாரித்து வருவதாக அதிகாரிகள் கூறியதை அடுத்து இந்த அறிக்கைகள் வந்துள்ளன.

கடந்த மாதம், Royal Canadian Mounted Police, ‘பொலிஸ்’ நிலையங்கள் என்று அழைக்கப்படுபவை தொடர்பான குற்றச் செயல்களின் அறிக்கைகளை விசாரித்து வருவதாகக் கூறியது, இவை பல ஐரோப்பிய நாடுகளிலும் பதிவாகியுள்ளன.

அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து உட்பட பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஏற்கனவே சீனாவிற்கு பொலிஸ் நிலையங்களை மூடுமாறு உத்தரவிட்டுள்ளன, அவை அரசாங்கத்தின் எதிர்ப்பாளர்களை சீனாவிற்குத் திரும்பவும் குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளவும் அழுத்தம் கொடுக்க பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இராஜதந்திர சேவைகளை வழங்குவதாக உறுதியளிக்கும் வெளிநாட்டு சேவை நிலையங்கள் என அழைக்கப்படுபவை ஐரோப்பாவில் உள்ள சீன எதிர்ப்பாளர்களை மௌனமாக்குவதற்கு பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கான ஆதாரத்தை நெதர்லாந்து ஊடகங்கள் கண்டறிந்தன.

Related

Tags: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோகனேடியத் தேர்தல்குற்றச்சாட்டுசீனா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்படும் 100 நாள் செயல் முனைவின் இறுதிநாள்!

Next Post

சில தமிழ் பிரதிநிதிகளின் எதிர்ப்பை கண்டித்தார் விஜேதாச !

Related Posts

அமெரிக்காவுடன் வரி மோதலுக்கு மத்தியில் கனடா பிரதமா் ஐரோப்பா பயணம்
உலகம்

அமெரிக்காவுடன் வரி மோதலுக்கு மத்தியில் கனடா பிரதமா் ஐரோப்பா பயணம்

2026-09-17
கனடாவுக்கு எதிராக அமெரிக்கா புதிய தடைகள்; இருதரப்பு உறவில் பின்னடைவு!
உலகம்

கனடாவுக்கு எதிராக அமெரிக்கா புதிய தடைகள்; இருதரப்பு உறவில் பின்னடைவு!

2026-09-09
அமெரிக்கப் பொருட்களுக்கு 50% வரை பதில் வரி விதித்தது கனடா: இருதரப்பு வர்த்தகப் போர் தீவிரம்!
அமொிக்கா

அமெரிக்கப் பொருட்களுக்கு 50% வரை பதில் வரி விதித்தது கனடா: இருதரப்பு வர்த்தகப் போர் தீவிரம்!

2026-08-26
வர்த்தக பேச்சுவார்த்தை முறிவடைந்ததைத்தொடர்ந்து அமெரிக்கப் பொருட்கள் மீது கனடா பரஸ்பர வரி விதிப்பு !
அமொிக்கா

வர்த்தக பேச்சுவார்த்தை முறிவடைந்ததைத்தொடர்ந்து அமெரிக்கப் பொருட்கள் மீது கனடா பரஸ்பர வரி விதிப்பு !

2026-08-22
கனடா மீதான புதிய வரிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்த ட்ரம்ப்!
அமொிக்கா

கனடா மீதான புதிய வரிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்த ட்ரம்ப்!

2026-08-19
அமெரிக்க-கனடா வர்த்தகப் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டம்: ட்ரம்பின் புதிய வரிகளைத் தவிர்க்கக் கனடா தீவிரம்!
அமொிக்கா

அமெரிக்க-கனடா வர்த்தகப் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டம்: ட்ரம்பின் புதிய வரிகளைத் தவிர்க்கக் கனடா தீவிரம்!

2026-08-18
Next Post
விஜயதாச ராஜபக்ஷ மீது கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் – அமைச்சர் கெஹலிய

சில தமிழ் பிரதிநிதிகளின் எதிர்ப்பை கண்டித்தார் விஜேதாச !

அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர்களின் நிலஅபகரிப்பினை நிறுத்த வேண்டும் – சாணக்கியன்

அதிகாரப் பரவலாக்கல் என்பது நாட்டை பிரிக்கும் யோசனை இல்லை - சாணக்கியன்

வாழ்க்கைச் செலவுக் கட்டணத்தின் இரண்டாம் தவணையை பெறும் எட்டு மில்லியன் மக்கள்!

வாழ்க்கைச் செலவுக் கட்டணத்தின் இரண்டாம் தவணையை பெறும் எட்டு மில்லியன் மக்கள்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
‘என் மகனை காப்பாற்றுங்கள்’ – ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள் 

‘என் மகனை காப்பாற்றுங்கள்’ – ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள் 

0
அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை – சாணக்கியன் எம்.பி.!

அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை – சாணக்கியன் எம்.பி.!

0
செங்கடல் நெருக்கடி தீவிரம்: சீன உதவியை நாடிய சவுதி அரேபியா!

செங்கடல் நெருக்கடி தீவிரம்: சீன உதவியை நாடிய சவுதி அரேபியா!

0
நாமல் ராஜபக்ஷவுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

நாமல் ராஜபக்ஷவுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

0
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்

0
‘என் மகனை காப்பாற்றுங்கள்’ – ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள் 

‘என் மகனை காப்பாற்றுங்கள்’ – ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள் 

2026-09-18
அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை – சாணக்கியன் எம்.பி.!

அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை – சாணக்கியன் எம்.பி.!

2026-09-18
செங்கடல் நெருக்கடி தீவிரம்: சீன உதவியை நாடிய சவுதி அரேபியா!

செங்கடல் நெருக்கடி தீவிரம்: சீன உதவியை நாடிய சவுதி அரேபியா!

2026-09-18
நாமல் ராஜபக்ஷவுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

நாமல் ராஜபக்ஷவுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

2026-09-18
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்

2026-09-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.