• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அதிகரித்து வரும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை! வேலியே பயிரை மேயலாமா?

அதிகரித்து வரும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை! வேலியே பயிரை மேயலாமா?

Ilango Bharathy by Ilango Bharathy
2023/12/06
in இலங்கை, சிறப்புக் கட்டுரைகள், முக்கிய செய்திகள்
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் அண்மைக்காலமாக சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்த போக்கு  மரணத்தை ஏற்படுத்தும் அளவிற்கு வந்துள்ளதால் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டி சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

யாழில். மருத்துவத்  தவறினால் 8 வயதுச் சிறுமியொருவரின்  இடது கை, மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட  சம்பவம் நாட்டு மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்ததை நாம் அறிவோம்.

இச்சம்பவம் ஏற்படுத்திய  தாக்கம் மறையும் முன்னமே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சமூட்டும் வகையில் உள்ளன.

குறிப்பாக தமிழர்கள் அதிகளவில் வாழ்ந்துவரும் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைச் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகி வருகின்றன.

அண்மையில் கல்முனையிலுள்ள ஆலயமொன்றில் திருடியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு  சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 வயதான  சிறுவனொருவன் பெண் பராமரிப்பாளர் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இச்சம்பவத்தினையடுத்து குறித்த சிறுவனைத் தாக்கிய பெண் பராமரிப்பாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

blank

இது இவ்வாறு இருக்க யாழில் அப்பியாச கொப்பியில் ஒழுங்காக எழுதவில்லை எனக் கூறி ஆசிரியை ஒருவர்  கையில் அடித்ததில் மாணவனின் நகம் சிதைவடைந்து சத்திர சிகிச்சை மூலம் நகம் அகற்றப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த  சம்பவம் தொடர்பில் அம்மாணவனின் பெற்றோர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் இது குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது யாழ். சாவகச்சேரியில், ஞாயிறு ஆராதனைக்குச் செல்லவில்லை எனக் கூறி சிறுமி ஒருவர் பங்குத் தந்தையால் தாக்கப்பட்ட சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் பங்குத் தந்தையே இவ்வாறு சிறுமி மீது தாக்குதல் நடத்தியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

blank

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இச்சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாது அவ்வப்போது பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களும், ஆசிரியர்களால் மாணவர்கள் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வரும் சம்பவங்களும்,  அதிகளவில் பதிவாகி வருகின்றன.

இது இவ்வாறு இருக்க அதிகரித்து வரும் போதைப் பொருள் பாவனையும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

குறிப்பாக யாழில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையால்  நுரையீரல் மற்றும் இருதய “வால்வு” ஆகியவற்றில் கிருமித் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்களில் பெருமளவானோர் 25 வயதிற்கும் குறைந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக  பாடசாலைகளுக்கு  முன்பாக  மாணவர்களைக் குறிவைத்து போதைப்பொருள் வியாபாரம் இடம்பெற்று வரும் சம்பவங்களும் அதிகளவில் பதிவாகியுள்ளன.

இளைஞர்களின் கையிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது என்றால், நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல சிறுவர்கள், மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பு மற்றும் நன்நடத்தையில் குடும்பம், சமூகம் மாத்திரமல்லாது மக்களுக்கான சேவையில் ஈடுபடும் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது.

மக்களால் தெரிவுசெய்யப்பட்டு நாடாளுமன்றத்திற்கு செல்லும் அரசியல் தலைவர்கள்,  அரச அதிகாரிகள் தமது கடமையை முறையாக செய்வதன் மூலம் இத்தகைய பிரச்சனைகளைத் தடுக்க முடியும்.

அத்துடன்  பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வு பெற்றுக் கொடுப்பது மாத்திரமல்லாது இனிமேல் இது போன்ற பிரச்சனை இடம்பெறாத வண்ணம் நடவடிக்கை முன்னெடுக்க வேண்டியதும்  அரசியல் தலைவர்கள், அரச அதிகாரிகளின் கடமையாகும்.

-இளங்கோ பாரதி

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வன்முறையில் ஈடுபட்ட வாகனம் மீட்பு : புதுக்குடியிருப்பில் பதுங்கியிருந்த இருவர் அதிரடியாக கைது

Next Post

வடக்கு யேமனில் உணவு விநியோகத்தை இடைநிறுத்துவதாகக் உலக உணவுத் திட்டம் அறிவிப்பு!

Related Posts

செம்மணி புதைகுழிக்குள் இருந்து விரல் என்புடன் மீட்கப்பட்ட மோதிரம்
இலங்கை

செம்மணி புதைகுழிக்குள் இருந்து விரல் என்புடன் மீட்கப்பட்ட மோதிரம்

2026-07-17
பொலிஸ் துறையில் பரபரப்பு! கான்ஸ்டபிள் மீது உடனடி பணி இடைநீக்கம்!
இலங்கை

பொலிஸ் துறையில் பரபரப்பு! கான்ஸ்டபிள் மீது உடனடி பணி இடைநீக்கம்!

2026-07-17
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு
இலங்கை

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு

2026-07-17
எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண உள்ளிட்ட 6 பேருக்கு பிடியாணை!
இலங்கை

எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண உள்ளிட்ட 6 பேருக்கு பிடியாணை!

2026-07-17
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற ஆடிப்பிறப்பு விழா!
இலங்கை

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற ஆடிப்பிறப்பு விழா!

2026-07-17
ரகித ராஜபக்சஷ, சரித் அபேசிங்க உள்ளிட்டோரின் விளக்கமறியல் நீடிப்பு!

ஹமாஸினால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகிய பெண்கள் : சீறும் இஸ்ரேல்

ஹமாஸினால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகிய பெண்கள் : சீறும் இஸ்ரேல்

மேற்கிந்திய தீவுகளுக்கு பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து?

மேற்கிந்திய தீவுகளுக்கு பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து?

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
செம்மணி புதைகுழிக்குள் இருந்து விரல் என்புடன் மீட்கப்பட்ட மோதிரம்

செம்மணி புதைகுழிக்குள் இருந்து விரல் என்புடன் மீட்கப்பட்ட மோதிரம்

0
பொலிஸ் துறையில் பரபரப்பு! கான்ஸ்டபிள் மீது உடனடி பணி இடைநீக்கம்!

பொலிஸ் துறையில் பரபரப்பு! கான்ஸ்டபிள் மீது உடனடி பணி இடைநீக்கம்!

0
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு

0
எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண உள்ளிட்ட 6 பேருக்கு பிடியாணை!

எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண உள்ளிட்ட 6 பேருக்கு பிடியாணை!

0
ரகித ராஜபக்சஷ, சரித் அபேசிங்க உள்ளிட்டோரின் விளக்கமறியல் நீடிப்பு!

ரகித ராஜபக்சஷ, சரித் அபேசிங்க உள்ளிட்டோரின் விளக்கமறியல் நீடிப்பு!

0
செம்மணி புதைகுழிக்குள் இருந்து விரல் என்புடன் மீட்கப்பட்ட மோதிரம்

செம்மணி புதைகுழிக்குள் இருந்து விரல் என்புடன் மீட்கப்பட்ட மோதிரம்

2026-07-17
பொலிஸ் துறையில் பரபரப்பு! கான்ஸ்டபிள் மீது உடனடி பணி இடைநீக்கம்!

பொலிஸ் துறையில் பரபரப்பு! கான்ஸ்டபிள் மீது உடனடி பணி இடைநீக்கம்!

2026-07-17
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு

2026-07-17
எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண உள்ளிட்ட 6 பேருக்கு பிடியாணை!

எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண உள்ளிட்ட 6 பேருக்கு பிடியாணை!

2026-07-17
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற ஆடிப்பிறப்பு விழா!

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற ஆடிப்பிறப்பு விழா!

2026-07-17

Recent News

செம்மணி புதைகுழிக்குள் இருந்து விரல் என்புடன் மீட்கப்பட்ட மோதிரம்

செம்மணி புதைகுழிக்குள் இருந்து விரல் என்புடன் மீட்கப்பட்ட மோதிரம்

2026-07-17
பொலிஸ் துறையில் பரபரப்பு! கான்ஸ்டபிள் மீது உடனடி பணி இடைநீக்கம்!

பொலிஸ் துறையில் பரபரப்பு! கான்ஸ்டபிள் மீது உடனடி பணி இடைநீக்கம்!

2026-07-17
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு

2026-07-17
எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண உள்ளிட்ட 6 பேருக்கு பிடியாணை!

எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண உள்ளிட்ட 6 பேருக்கு பிடியாணை!

2026-07-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.