நாட்டில் இன்று (செவ்வாய்கிழமை) வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென வானிலை மையம் தெரிவித்துள்ளது
அத்துடன் மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடமத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் அனுராதபுரம் மற்றும் மொனராகலை மாவட்ட ங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் மத்திய, சப்ரகமுவ,மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.















