டெல்லியில் இருந்து வாரணாசி செல்லும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
இதனால், இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமான பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று காலை பதிவாகியதையடுத்து, விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளையும் விமானத்தின் அவசர கதவுகள் வழியாக வெளியே அழைத்துச் செல்ல அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
மேலும் குறித்த விமானம் தனிமைப்படுத்தப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.














