சர்வதேச கடன் வழங்குனருடன் இலங்கை செய்துள்ள ஒப்பந்தம் எதிர்கால ஆணையின் கீழ் திருத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழுவுடன் எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மருத்துவத்துறையின் தற்போதைய நிலவரங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.













