இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர மீண்டும் நாமல் ராஜபக்சவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார்.
அவருடன் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி பிரதிநிதிகள் குழுவும் வரவுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இவர் முன்னதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்திருந்தார்
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் எதிர்வரும் 21ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.














