தென் கொரியாவில் பெய்து வரும் கனமழையால் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,300க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அதேநேரம், கன மழை தொடரும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு நிலையம் எச்சரித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 80 வயதுடைய இரண்டு ஆண்களும் அடங்குவர்.
வரலாறு காணாத மழைப் பொழிவானது வானிலை தொடர்பான பேரிடர் எச்சரிக்கையை தூண்டுவதற்கு வழிவகுத்துள்ளது.
நாட்டின் மேற்கு கடற்கரையில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நகரமான சியோசனில் 12 மணி நேரத்தில் 400 மி.மீக்கும் அதிகமான மழை பெய்தது.
இது ஒரு நூற்றாண்டில் பதிவு செய்யப்பட்ட அதிகூடிய மழை வீழ்ச்சி என தென்கொரிய வானிலை ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.
மண்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ள அபாயம் தொடர்ந்து அதிகமாக இருப்பதால், ஆற்றங்கரைகள், மலைச் சரிவுகள் மற்றும் தாழ் நிலநப் பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் மக்களை வலியுறுத்தியுள்ளனர்.
வெள்ளம் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளில் வாகனங்கள், வீடுகள் நீரில் மூழ்கியிருப்பதையும், தளபாடங்கள் தண்ணீரில் மிதப்பதையும் காட்டுகின்றன.


















