தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுடன், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சேவைத் தேவைகளின் அடிப்படையில் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்த இடமாற்றங்களை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப். யு. வுட்லர் தெரிவித்தார்.
அதன்படி, சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர்கள், பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் உதவிப் பொலிஸ் பரிசோதகர்கள் ஆகியோர் அடங்கிய குழுவுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.















