அடுத்த வாரம் இங்கிலாந்தில் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளைய தினம் (03) தெற்குப் பகுதிகளில் வெப்பநிலை 17C முதல் 18C வரை காணப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த வார தொடக்கத்தில் இங்கிலாந்தில் வெப்பநிலை ஆண்டு முழுவதும் சராசரியை விட அதிகமாக இருக்கும் என்று முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாளையத்தினம் தெற்கின் சில பகுதிகளில் 17C (62.6F) ஐ எட்டக்கூடும்.
பெரும்பாலும் (Welsh Marches) வெல்ஷ் மார்ச் பகுதிகளை சுற்றி 18C (64.4F) என வெப்பநிலை காணப்பட கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அதிக வெப்பநிலை மேகமூட்டமான வானிலை மற்றும் தென்மேற்கிலிருந்து “மிகவும் வலுவான” காற்று மற்றும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் வியக்கிழமை வெப்பநிலை மீண்டும் குறைந்து , அதன் பின்னர் இன்னும் சில நாட்களுக்கு நிலைமைகள் ஓரளவு சீராக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மாதத்தின் முதல் பாதியில் ஈரமான காற்று வீசுவதுடன் , வானிலை முறைகள் சீராகத் தோன்றும் எனவும் வறண்ட காலங்கள் மிகவும் பொதுவானதாக மாறும் எனவும் சராசரி வெப்பநிலைக்கு அருகில் இருக்கும் எனவும் மேலும் இரவு முழுவதும் உறைபனி ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாளையத்தினம் ஏற்படும் , அதிகபட்ச வெப்பநிலை 14C முதல் 15C வரை இருக்கும் எனவும் சிலவேளைகளில் 17C கூட இருக்கலாம் எனவும் வானிலை அலுவலக வானிலை ஆய்வாளர் கிரிகோரி டெவ்ஹர்ஸ்ட் (Gregory Dewhurst) கூறினார்.














