ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் குழுவொன்று இன்று பொல்துவ நாடாளுமன்ற சுற்றுவட்டாரத்தில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்த நிலையில் பொலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.
இராணுவ வீரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் முப்படை மற்றும் பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வுபெற்ற படைவீரர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
தாம் உயிரிழந்த பின்னரும் தமது ஓய்வூதியத்தை தமது தங்கியிருப்பாளர்களுக்கு வழங்கக்கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தின் பின்னர் குழுவினர் நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்ல முற்பட்ட வேளையில், பொலிஸார் அவர்களை தடுக்க முற்பட்டபோது அங்கு பதற்றமாக நிலை ஏற்பட்டிருந்தது.
இதேவேளை போரில் அங்கவீனமடைந்த முன்னாள் இராணுவத்தினரும் இன்றை போராட்டத்தில் கலந்து கொண்ட நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேரில் சென்று கலந்துiராயாடியுள்ளார்.
மேலும் ஊனமுற்ற போர் வீரர்களின் சலுகைகளை நீக்குவதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை நிறுத்துமாறும் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
















