யாழ்ப்பாணம் – அரியாலை மற்றும் நல்லூர் அரசடிப் பகுதிகளில் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் ஹெரோயின் விநியோகத்தில் ஈடுபடுவதாக குருநகர் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், 2.5 கிராம் ஹெரோயினுடன் 27 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, நல்லூர் அரசடிப் பகுதியில் 570 மில்லி கிராம் ஹெரோயினுடன் விற்பனையில் ஈடுபட்ட 24 வயதுடைய மற்றுமொரு இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இருவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.














