இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த இராணுவ மோதலின் போது புது டெல்லிக்கும் இஸ்லாமாபாத்துக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ததாக சீனா தெரிவித்த கூற்றுக்களை இந்தியா உறுதியாக நிராகரித்துள்ளது.
போர்நிறுத்த முடிவில் எந்த மூன்றாம் தரப்பினரும் ஈடுபடவில்லை என்பதையும் இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
மே 10 அன்று ஆப்ரேஷன் சிந்தூரை தொடர்ந்து, இரு நாடுகளின் இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் இடையேயான நேரடிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து போர்நிறுத்தம் எட்டப்பட்டது என்பதை இந்தியா தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது.
இந்த நிலையில், சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, டொனால்ட் ட்ரம்பைப் போல நடந்து கொண்டு, மே மாதம் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் உட்பட பல உலகளாவிய மோதல்களுக்கு பெய்ஜிங் மத்தியஸ்தம் செய்ததாகக் கூறியதைத் தொடர்ந்து இந்தியாவின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
மத்தியஸ்தம் தொடர்பில் செவ்வாயன்று (30) நடந்த ஒரு நிகழ்வில் பேசிய சீன வெளிவிவகார அமைச்சர்,
இரண்டாம் உலகப் போரின் முடிவில் இருந்து இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு உள்ளூர் போர்களும் எல்லை தாண்டிய மோதல்களும் அதிகமாக வெடித்தன.
நீடித்த அமைதியைக் கட்டியெழுப்பும் முயற்சியில், சீனா ஒரு புறநிலை மற்றும் நடுநிலை நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
அதேநேரத்தில் போருக்கான அறிகுறிகள் மற்றும் மூல காரணங்கள் இரண்டையும் நிவர்த்தி செய்வதில் கவனம் செலுத்துகிறது.
சூடான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான இந்த சீன அணுகுமுறையைப் பின்பற்றி, வடக்கு மியான்மர், ஈரானிய அணுசக்தி பிரச்சினை, பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பதட்டங்கள், பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பிரச்சினைகள் மற்றும் கம்போடியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையிலான அண்மைய மோதல் ஆகியவற்றில் நாங்கள் மத்தியஸ்தம் செய்தோம் – என்று கூறினார்.
















