முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (05) நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையானார்.
விசாரணைக்காக திட்டமிட்டபடி முன்னதாகத் தவறினால் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய நீதி மன்றிடம் பிடியாணை உத்தரவு கோரப்படும் என்று பொலிஸார் முன்னதாக எச்சரித்திருந்தனர்
லங்கா சதோசாவுக்குச் சொந்தமான லாரியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இது அரசுக்கு கணிசமான நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதே சம்பவம் தொடர்பாக, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராக இருந்த காலத்தில் சதோசவின் போக்குவரத்து முகாமையாளராகப் பணியாற்றிய இந்திக ரத்னமலால நேற்று (04) கைது செய்யப்பட்டார்.
வத்தளை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், ஜனவரி 9 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
















