மினியாபோலிஸ் நகரில் புதன்கிழமை (08), அமெரிக்க குடியேற்ற முகவர் ஒருவர் தனது காரில் இருந்த 37 வயது பெண்ணை சுட்டுக் கொன்றதாக உள்ளூர் மற்றும் கூட்டாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நாடு தழுவிய புலம்பெயர்ந்தோர் மீதான ஒடுக்குமுறையின் அண்மைய வன்முறையாகும்.
முகவர் தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ட்ரம்ப் நிர்வாகத்தினர் முன்வைத்துள்ள கூற்றை மினியாபோலிஸ் நபர் மேயர் ஜேக்கப் ஃப்ரே உறுதியாக நிராகரித்தார்.
ரெனீ நிக்கோல் குட் (Renee Nicole Good) என அடையாளம் காணப்பட்ட குறித்தப் பெண், குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்க முகவர்கள் மீது வாகனத்தினால் மோத முயன்ற “வன்முறை கலவரக்காரர்” என்று ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதன்போது ஒரு அதிகாரி அவரது வாகனத்தின் மீது தற்காப்பு நடவடிக்கையைாக துப்பாக்கிச் சூட்டினை நடத்தினார் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் நகர மற்றும் மாநிலத் தலைவர்களும், தேசிய அளவில் ஜனநாயகக் கட்சியினரும் அந்தக் கூற்றினை உறுதியாக நிராகரித்தனர்.
சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான வெள்ளை மாளிகையின் நாடு தழுவிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக நூற்றுக்கணக்கான குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்க முகவர்கள் நகரத்திற்கு அனுப்பப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

















