பொது அலுவலகத்தில் தவறான நடத்தை குற்றச்சாட்டுகள் தொடர்பாக லோர்ட் மண்டேல்சன் (Lord Mandelson) மீது லண்டன் பெருநகர காவல்துறை குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
முன்னாள் தொழிலாளர் அமைச்சரும் அமெரிக்க தூதருமான லோர்ட் மண்டேல்சன் இங்கிலாந்து அரசாங்கத் தகவல்களை அமெரிக்க நிதியாளரும் பாலியல் குற்றவாளியுமான ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நீதித்துறை (DoJ) வெளியிட்ட அண்மைய மின்னஞ்சல்கள், 2009 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் கோர்டன் பிரவுனின் கீழ் வணிகச் செயலாளராக லோர்ட் மண்டேல்சன் இருந்த போது, எப்ஸ்டீனுக்கு தகவல்களை அனுப்பியதைக் காட்டுகின்றன.
இது தொடர்பான கருத்துக்கான கோரிக்கைகளுக்கு லோர்ட் மண்டேல்சன் பதிலளிக்கவில்லை.
கடந்த ஆண்டு அமெரிக்காவிற்கான இங்கிலாந்து தூதர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட லோர்ட் மண்டேல்சன் மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான நட்பு குறித்த புதிய வெளிப்பாடுகளைத் தொடர்ந்து தொழிலாளர் கட்சியில் இருந்து இராஜினாமா செய்தமையும் குறிப்பிடத்தக்கது.
















