தாய்வான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
இதன்படி, தாய்வான் தயாரிப்புகளுக்கு அமெரிக்காவினால் விதிக்கப்படும் இறக்குமதி வரி விகிதம் 15 வீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
தாய்வான் பொருட்களுக்கு இதற்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த 20 வீத வரி விகிதம் இப்போது 15 வீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இது ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளுக்கு வழங்கப்படும் வரிச் சலுகைக்கு நிகரானது.
அமெரிக்காவிலிருந்து தாய்வானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மோட்டார் வாகனங்கள், மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி உள்ளிட்ட விவசாய மற்றும் கைத்தொழில் பொருட்களுக்கு தாய்வான் சந்தையில் முன்னுரிமை வழங்கப்படும்.
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, தாய்வான் தனது குறைக்கடத்தி மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகளில் அமெரிக்காவில் சுமார் 500 பில்லியன் டொலர் முதலீடு செய்ய உடன்பட்டுள்ளது.
















