க.பொ.த சாதாரண தர பரீட்சை (17) இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் மாணவர்கள் பரீட்சைக்கு ஆர்வமாக செல்வதை காண முடிந்தது.
அந்த வகையில் மலையக மாணவர்கள் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் பங்கெடுப்பதற்காக மிக ஆர்வத்துடன் ஒதுக்கப்பட்ட பரீட்சை மண்டபத்திற்கு சென்றனர் .
நுவரெலியா மாவட்டத்தில் காலநிலை சற்று சாரல் மழையுடன் மந்தமாக உள்ள போதிலும் ஹட்டன் , நுவரெலியா, நானுஓயா போன்ற பகுதிகளில் மாணவர்கள் அறிவிக்கப்பட்ட நேரத்திற்குள் பரீட்சை மண்டபத்திற்கு சென்றதை காணக்கூடியதாக இருந்தது.
இதற்காக அரச பேருந்துகளை மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது














