அம்பத்தளையில் இருந்து தெஹிவளை வரை நீர் விநியோகிக்கும் பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட அவசரக் கோளாறு காரணமாக பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
இதன்படி, மொரட்டுவ, ராவதவத்தை, சொய்சாபுர, இரத்மலானை, தெஹிவளை, கல்கிசை, வெள்ளவத்தை, பாமன்கடை, முல்லேரியா, கொலன்னாவை ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பத்தரமுல்லை பகுதிக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படுகிறது.
நாளை (19) காலை 6:00 மணிக்கு முன்னர் நீர் விநியோகம் வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.













