தெஹ்ரானில் புதன்கிழமை (இன்று) இரவு நடைபெறும் இறுதி நிகழ்வில் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு ஈரானியர்கள் பிரியாவிடை அளிப்பார்கள் என்று தெஹ்ரானின் மூத்த அதிகாரி ஒருவர் அரசு ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
பிரியாவிடை நிகழ்வு மூன்று நாட்களுக்கு தொடரும் என்றும், இறுதி ஊர்வலம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஈரானின் இஸ்லாமிய பிரச்சார கவுன்சிலின் தலைவர் ஹோஜ்ஜதோலெஸ்லாம் மஹ்மூதி குறிப்பிட்டுள்ளார்.
மறைந்த உச்ச தலைவர் அலி கமேனியின் உடலுக்கு புதன்கிழமை இரவு 10 மணி முதல் தெஹ்ரானின் இமாம் கொமேனி பிரார்த்தனை மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த முடியும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீதான விரோதப் போக்கை அடிப்படையாகக் கொண்டு ஈரானின் இரும்புக் கரம் கொண்ட ஆட்சியை நிலைநாட்டிய ஈரானின் அலி கமேனி, சனிக்கிழமை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் தனது 86 வயதில் கொல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.













