டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்ட யுவதியின் சடலத்திற்கு பாலியல் வல்லுரவு ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படும் சிற்றுழியர்கள் மூன்று பேருக்கு எதிராகசட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி யுவதியின் பெற்றோர்கள் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
நேற்று மாலை யுவதியின் பெற்றோர் இந்த முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது எனது பிள்ளைக்கு வைத்தியசாலையில் எதோ ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது .
அந்த சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு கேமராவில் பதிவான காட்சிகளை முழுமையாக வைத்தியசாலையின் வைத்தியர் எமக்கு காண்பிக்கவில்லை ,
ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற போது மக்கள் மத்தியிலும் ஊடகங்களின் முன்னாலும் வைத்தியர் கருத்து தெரிவித்ததை நாங்கள் பார்க்கவில்லை பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கேமராவில் குறித்த மூன்று பேரும் போய்வந்த காட்சிகள் 59செக்கன்கள் மாத்திரமே உள்ளது அதற்குள் ஒன்றும் இடம்பெற்றிக்காது இது தொடர்பாக மூன்று பேர் கொண்ட குழுவினை அமைத்துள்ளேன் இதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வைத்தியர் தெரிவித்தார் என பாதிக்கப்பட்ட யுவதியின் தயார் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் மத்தியிலும் ஊடகங்களிடமும் வைத்தியர் கூறிய கருத்துக்களின்படி, வேறு யுவதியின் உடலம் மீது சந்தேகம் வைத்தியருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார்.
அவ்வாறு அவர் கூறுவதற்கான காரணம் என்ன? எனவே இந்த மூன்று பேரும் இரவு நேரத்தில் எதற்காக பிரேத அறைக்கு சென்றார்கள் அங்கு அவர்கள் சென்றிருக்க தேவையில்லை அவர்களுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாங்கள் வைத்தியசாலை தரப்பிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டதாக மக்கள் எம்மீது குற்றம் சுமத்துகின்றனர் வைத்தியர் நாங்கள் இன்று எனது பிள்ளையை இழந்து தவிக்கின்றோம் எங்களிடம் காட்டிய காணொளியினால் நாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம் என யுவதியின் தாயார் தெரிவித்தார்.













