கணினி நிதிக்குற்றங்களில் ஈடுபடும் நோக்கில் நாட்டிற்குள் நுழைந்த ஒன்பது சீன நாட்டினர் இன்று காலை (16) கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
விமான நிலைய சுங்க அதிகாரிகள், அவர்களிடமிருந்து ரூ. 24.20 மில்லியன் பெறுதியான மின்னணு தகவல் தொடர்பு சாதனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த சீன நாட்டவர் குழுவினர், சீனாவின் குன்மிங்கிலிருந்து சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் MU-6912 விமானம் மூலம் இன்று காலை 12.25 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அவர்களிடமிருந்து 383 பயன்படுத்தப்பட்ட மொபைல் தொலைபேசிகள், 101 டேப்லெட் கணினிகள் மற்றும் 6 வைஃபை ரவுட்டர்கள் உள்ளிட்ட சாதனங்கள் மீட்கப்பட்டன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.












