வேல்ஸ் வரலாற்றில் முதன்முறையாக தொழிலாளர் கட்சி அல்லாத ஒரு அரசாங்கம் அமைந்துள்ள நிலையில், Plaid Cymru கட்சியின் தலைவர் ரன் அப் இயோர்வர்த் (Rhun ap Iorwerth) புதிய முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த தேர்தலில் Plaid Cymru கட்சி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, மன்னர் சார்லஸின் அதிகாரப்பூர்வ ஒப்புதலுடன் அவர் பதவியேற்றுக்கொண்டார்.
“மக்களின் நம்பிக்கைக்கு நான் கடமைப்பட்டுள்ளேன்” எனத் தெரிவித்த அவர், இன்று தனது புதிய அமைச்சரவையை அறிவிக்கவுள்ளார்.
96 இடங்களைக் கொண்ட விரிவுபடுத்தப்பட்ட வேல்ஸ் நாடாளுமன்றத்தில், 43 இடங்களைப் பெற்று Plaid Cymru தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
அதேவேளை, 34 இடங்களைக் கைப்பற்றி இரண்டாவது பெரிய கட்சியாக மாறியுள்ள ‘Reform’ கட்சி, ஒரு வலுவான எதிர்க்கட்சியாகச் செயற்படப்போவதாக அறிவித்துள்ளது.
பிரித்தானியாவிலிருந்து வேல்ஸ் தனிநாடாகப் பிரிந்து சுதந்திரம் அடைய வேண்டும் என்ற கொள்கையைக் கொண்ட ஒரு அரசு அங்கு பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.















