பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் இவெட் கூப்பர் (Yvette Cooper) எதிர்வரும் ஜூன் மாத தொடக்கத்தில் சீனாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொள்வுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்து தலைநகரில் புதிய சீனத் தூதரகம் அமைப்பது தொடர்பான எந்தவொரு புதிய பின்னடைவுக்கும் முன்னதாக பெய்ஜிங்குடனான ஒப்பீட்டளவில் இணக்கமான உறவுகளை லண்டன் பயன்படுத்திக்கொள்ள முற்படும் வேளையில் இந்த பயணம் அமையவுள்ளது.
ஜூன் 2-3 ஆம் திகதிகளில் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் பயணத்தில் இவெட் கூப்பர், சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீயுடன் பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்த விடயங்களை அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன் பின்னர், வணிக நிறுவனங்களைச் சந்திப்பதற்காக தெற்கில் உள்ள தொழில்நுட்ப மையமான ஷென்செனுக்கு பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் செல்வார் என்றும் கூறப்படுகிறது.
ஐரோப்பாவில் பெய்ஜிங் தனது மிகப்பெரிய தூதரகத்தை லண்டனில் கட்டுவதற்கான திட்டங்களுக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்தும், பதவியில் இருக்கும் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான தடைகளை நீக்குவது தொடர்பில் சீனா கவனம் செலுத்தி வரும் நிலையில் இந்தப் பயணம் அமையவுள்ளது.
எனினும் பெய்ஜிங்கில் உள்ள பிரிட்டிஷ் தூதரகமும், சீன வெளிவிவகார அமைச்சும் இந்த பயணம் தொடர்பில் உத்தயோகப்பூர்வ அறிக்கை எதையும் இன்னும் வெளியிடவில்லை.
















