முழு நாடும் ஒன்றாக தேசிய செயற் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் மூலமாக 176,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, 2025 ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் நேற்று (14) வரை நடத்தப்பட்ட சோதனைகளில் மொத்தம் 176,269 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது, 1941 கிலோ 248 கிராம் ஹெரோயின், 2003 கிலோ 512 கிராம் ஐஸ் மற்றும் 436 கிலோ 235 கிராம் குஷ் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்களும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 325 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 2,820 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன.
அதேநேரம், 2,050 சந்தேக நபர்கள் புனர்வாழ்வுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.













