• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கொட்டும் மழையில் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் ஆசிரியர்கள் திரண்டு பாரிய போராட்டம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/15
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

வட மாகாணத்தில் இடமாற்றச் சபையின் விதிகளை மீறி, முறையற்ற வகையில் ஆசிரிய இடமாற்றங்கள் வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் ஊழல் அதிகாரிகளால் இடமாற்றச் சபையை மீறி மேற்கொள்ளப்பட்ட ஆசிரிய இடமாற்றங்களைக் கண்டித்து, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (15) வெள்ளிக்கிழமை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் பாரிய கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் தீபன் திலீசன், மாகாணக் கல்வி நிர்வாகம் மற்றும் ஆளுநருக்கு எதிராகப் பலத்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்:

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்துடன் இணைந்து ஊழல் கல்வி அதிகாரிகள் வட மாகாணக் கல்வியைத் திட்டமிட்டு அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தங்களுக்கு வேண்டியவர்களையும், ஆளுங்கட்சிக்குச் சார்பானவர்களையும் யாழ்ப்பாண நகரப் பகுதிகளிலேயே தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டு, தீவகம் மற்றும் மருதங்கேணி போன்ற கஷ்டப் பிரதேசங்களில் நீண்டகாலம் சேவையாற்றிய ஆசிரியர்களை மீண்டும் பழிவாங்கும் நோக்குடன் வெளிமாவட்டங்களுக்குத் திட்டமிட்ட முறையில் இடமாற்றம் செய்கின்றனர்.

இந்த முறைகேடான இடமாற்றங்கள் குறித்து வட மாகாண ஆளுநருக்கு எழுத்து மூலம் சுட்டிக்காட்டியும், அவர் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றவே ஆளு துணை நிற்கிறார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் குறித்துப் பேசப்பட்டபோது, “இந்த இடமாற்றத்தை செய்தே தீர வேண்டும்” என ஆளுநர் முண்டியடித்துக்கொண்டு கூறியமை எமக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

யாழ்ப்பாணத்தில் உயர்தர விஞ்ஞானப் பிரிவில் (A/L Science) ஆங்கில மொழி மூலம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர், அந்தப் பாடமே இல்லாத ஒரு கல்வி வலயத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். இதன் பின்னணியில் யாழ்ப்பாணத்தின் உயர்தர விஞ்ஞானப் பிரிவைத் திட்டமிட்ட முறையில் அழிக்கும் சதித் திட்டம் மறைந்துள்ளது.

வெளிமாவட்டங்களுக்கு ஆசிரியர்களைப் பகிர்ந்தளிப்பதை ஆசிரியர் சங்கம் எதிர்க்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், ஆனால் இதுவரை வெளிமாவட்ட சேவையே செய்யாதவர்கள் அரசியல் செல்வாக்கோடு சொகுசாக இருக்கும்போது, கஷ்டப் பிரதேசங்களில் பணியாற்றியவர்களை மீண்டும் மீண்டும் பழிவாங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்தார்.

உரிய முறையில் இந்த இடமாற்றப் பிரச்சினைகள் பரிசீலிக்கப்பட்டு தீர்வு வழங்கப்படும் வரை, இந்தத் தொடர் போராட்டங்கள் ஓயாது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

blank blank

Related

Tags: Jaffnasrilanka newsteachers protest
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முழு நாடும் ஒன்றாக விசேட நடவடிக்கையில் 176,000க்கும் மேற்பட்டோர் கைது!

Next Post

அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் ஸ்டெர்லிங் பவுண்ட்ஸின் பெறுமதி கடும் வீழ்ச்சி!

Related Posts

நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருக்கும் பாதாள உலக குழு தலைவர்களை விரைவாகக் கைது செய்ய நடவடிக்கை!
இலங்கை

முழு நாடும் ஒன்றாக விசேட நடவடிக்கையில் 176,000க்கும் மேற்பட்டோர் கைது!

2026-05-15
சனத் நிஷாந்தவின் சகோதரருக்கு சிறைத்தண்டனை!

குறைந்த வருமானம் பெறும் ஐந்து குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கிவைப்பு!

“மாகாண சபைத் தேர்தல் இந்த வருடத்திற்குள் நிச்சயமாக நடத்தப்படும்” – அமைச்சர் கிரிஷாந்த அபேசேன உறுதி!

பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை
இலங்கை

ஆராச்சிக்கட்டுவ முன்னாள் தலைவர் ஜகத் சமந்தவிற்கு ஐந்தரை ஆண்டுகள் சிறை!

2026-05-15
நுவரெலியாவில் பயங்கரம்: ஆறு மாதங்களாகக் கூடாரங்களில் தவிக்கும் 23 குடும்பங்கள் – அதிகாரிகளின் மிரட்டலால் அவலம்!
இலங்கை

நுவரெலியாவில் பயங்கரம்: ஆறு மாதங்களாகக் கூடாரங்களில் தவிக்கும் 23 குடும்பங்கள் – அதிகாரிகளின் மிரட்டலால் அவலம்!

2026-05-15
Next Post
அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் ஸ்டெர்லிங் பவுண்ட்ஸின் பெறுமதி கடும் வீழ்ச்சி!

அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் ஸ்டெர்லிங் பவுண்ட்ஸின் பெறுமதி கடும் வீழ்ச்சி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் ஸ்டெர்லிங் பவுண்ட்ஸின் பெறுமதி கடும் வீழ்ச்சி!

அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் ஸ்டெர்லிங் பவுண்ட்ஸின் பெறுமதி கடும் வீழ்ச்சி!

0
கொட்டும் மழையில் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் ஆசிரியர்கள் திரண்டு பாரிய போராட்டம்!

கொட்டும் மழையில் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் ஆசிரியர்கள் திரண்டு பாரிய போராட்டம்!

0
நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருக்கும் பாதாள உலக குழு தலைவர்களை விரைவாகக் கைது செய்ய நடவடிக்கை!

முழு நாடும் ஒன்றாக விசேட நடவடிக்கையில் 176,000க்கும் மேற்பட்டோர் கைது!

0
சனத் நிஷாந்தவின் சகோதரருக்கு சிறைத்தண்டனை!

சனத் நிஷாந்தவின் சகோதரருக்கு சிறைத்தண்டனை!

0
சிறுவர் பராமரிப்பு நிலையம் மீதான பிரிட்டனின் தடைகள் குறித்து வட கொரியா கண்டனம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.