உள்நாட்டு அரசியல் நிச்சயமற்ற தன்மையும், பணவீக்க அதிர்ச்சி குறித்த உலகளாவிய கவலைகளுக்கு மத்தியில் இன்று (15) பிரிட்டிஷ் அரசாங்கப் பத்திரங்கள், பங்குகள் மற்றும் ஸ்டெர்லிங் பவுண்ட்ஸ் ஆகியவை கடுமையாக சரிந்தன.
குறிப்பாக பிரிட்டிஷ் நாணயமான ஸ்டெர்லிங் பவுண்ட்ஸ் ஐந்து வார காலத்தில் கடுமையான குறைந்தபட்ச நிலைக்குச் சரிந்ததுடன், இந்த வாரம் அமெரிக்க டொலருக்கு எதிராக கிட்டத்தட்ட 2% வீழ்ச்சியடைந்தது.
இது 2024 நவம்பர் மாதத்துக்குப் பின்னர் அதன் மிகப்பெரிய வாராந்திர சரிவை நோக்கி செல்வதாக பொருளாதார நிபுணர்கள் கவலை கொண்டுள்ளனர்.
வியாழக்கிழமை பிற்பகுதியில் கடுமையாகச் சரிந்த பவுண்ட்ஸ் இன்று டொலருக்கு எதிராக மேலும் 0.3% சரிந்து 1.3371 அமெரிக்க டொலர்களாகக் ஆகக் குறைந்தது.
அதேநேரம், ஐக்கிய இராச்சிய அரசாங்கத்திற்கு வழங்கப்படும் 10 ஆண்டு கடனுக்கான வட்டி விகிதமான 10 ஆண்டுப் பத்திர வருவாய் வர்த்தகம் தொடங்கிய நேரத்தில் 4.99% ஆக இருந்த நிலையில் 5.11% ஆக உயர்ந்தது.
கடந்த வாரம் நடந்த படுமோசமான உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் அரசாங்கத்திலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.
அதேநேரம், பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடி வரும் வேளையில், ஏனையவர்கள் அவரது தலைமைக்கு சவால் விடத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டுள்ள நிலையில் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.















