• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

தையிட்டி சட்டவிரோத விகாரை வீதி விவகாரம் தொடர்பான பலாலி பொலிஸாரின் வழக்கு மீதான கட்டளை ஒத்திவைப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/21
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட வேண்டும் என பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கிற்கான கட்டளை எதிர்வரும் ஜூன் மாதம் 25ம் திகதி வழங்கப்படும் என நீதிமன்று திகதியிட்டுள்ளது.

குறித்த கட்டளை இன்றைய தினம் வழங்கப்படும் என கடந்த 11ஆம் திகதி மன்று திகதியிட்டிருந்த நிலையில் , இன்றைய தினம் வழக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது கட்டளை ஜூன் மாதம் 25ஆம் திகதி வழங்கப்படும் என மன்று திகதியிட்டுள்ளது.

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான “பவானி” வீதி காணப்படுகிறது.

குறித்த வீதியினை விடுவிக்கும் நோக்குடன் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி வீதி அளவீடு செய்யப்பட்டது.

அதனை அடுத்து குறித்த வீதியை மறித்து அடைக்கப்பட்டுள்ள வேலியை விகாராதிபதி அகற்ற வேண்டும் எனவும் , தவறும் பட்சத்தில் பிரதேச சபை வேலியை அகற்றும், வேலியை அகற்றும் செலவீனத்தை விகாராதிபதி பிரதேச சபைக்கு வழங்க வேண்டும் என தவிசாளர் கடிதம் மூலம் விகாராதிபதிக்கு அறிவித்து இருந்தார்.

அதனை அடுத்து பிரதேச சபை விகாரை வேலியை அடாத்தாக அகற்ற முற்படுவதாக பலாலி பொலிஸ் விகாராதிபதி முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் , தவிசாளரை பலாலி பொலிஸார் அழைத்து, வேலியை அகற்றினால் , இனங்களுக்கு இடையில் பிரச்சனைகள் ஏற்பட்டு , நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் எனவே வேலியை அகற்றும் பணிகளை கைவிட வேண்டும் என அச்சுறுத்தும் தொனியில் கூறியுள்ளனர்.

அதற்கு தவிசாளர், மறுப்பு தெரிவித்து , பிரதேச சபைக்கு சொந்தமான வீதியை விகாராதிபதியே அடாத்தாக கையகப்படுத்தி வைத்திருப்பதாகவும் , வீதியை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம் என உறுதியாக கூறி இருந்தார்.

அந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வலி . வடக்கு பிரதேச சபை வீதியை மீட்கும் பணியை கைவிட வேண்டும் என்றும் , அதற்கு எதிராக நீதிமன்று தடையுத்தரவு வழங்க வேண்டும் என பலாலி பொலிஸார் மல்லாகம் நீதிமன்றில் மனு தாக்கல் செய்தனர்.

குறித்த மனு மீதான விசாரணையின் போது, ஒரு தலைப்பட்சமாக விசாரணை செய்ய முடியாது என கூறிய மன்று , வலி. வடக்கு தவிசாளர் மற்றும் பிரதேச சபை செயலாளர் ஆகியோரை கடந்த 11ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுத்திருந்தது.

அதன் பிரகாரம் தவிசாளர் மற்றும் பிரதேச சபை செயலாளர் ஆகியோர் அன்றைய தினம் மன்றில் முன்னிலையான நிலையில் , அவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் முன்னிலையாகி தமது தரப்பு வாதங்களை முன் வைத்தார்.

அதனை அடுத்து குறித்த வழக்கின் மீதான கட்டளைக்காக இன்றைய தினத்திற்கு மன்று திகதியிட்டு இருந்த நிலையில் இன்றைய தினம் கட்டளையை எதிர்வரும் ஜூன் மாதம் 25ஆம் திகதி வழங்குவதாக மன்று திகதியிட்டுள்ளது.

Related

Tags: Jaffnasrilanka newsthaiyiddi
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இங்கிலாந்தில் சட்டவிரோத கழிவுக்கொட்டல் தொடர்பில் சுற்றுச்சூழல் நிறுவனம் தீவிர நடவடிக்கை!

Next Post

சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்து நாடு திரும்பினார் பிரதமர் மோடி!

Related Posts

கன்னி சதம் அடித்தார் சொனால் தினுஷ!
இலங்கை

கன்னி சதம் அடித்தார் சொனால் தினுஷ!

2026-08-17
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு
இலங்கை

இலஞ்சம் வாங்கிய நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்குப் பிணை !

2026-08-17
நாளை முதல் கண்டியில் சிறப்பு போக்குவரத்து, பாதுகாப்பு திட்டம்!
இலங்கை

நாளை முதல் கண்டியில் சிறப்பு போக்குவரத்து, பாதுகாப்பு திட்டம்!

2026-08-17
என்.ஜி.ஓ. சட்ட வரைவிற்கு எதிராக முல்லைத்தீவில் கவனயீர்ப்புப் போராட்டம்: மேலதிக செயலாளரிடம் மகஜர் கையளிப்பு!
இலங்கை

என்.ஜி.ஓ. சட்ட வரைவிற்கு எதிராக முல்லைத்தீவில் கவனயீர்ப்புப் போராட்டம்: மேலதிக செயலாளரிடம் மகஜர் கையளிப்பு!

2026-08-17
ஆன்லைன் மோசடிகள் அதிகரிப்பு; மக்கள் அவதானம்!
இலங்கை

வங்கிக் கணக்குகளை குறிவைத்து புதிய மோசடி; மக்களை எச்சரிக்கும் SLCERT! 

2026-08-17
வரலாற்றிலேயே மிக வலுவான ‘எல் நினோ’ உருவாகும் அபாயம்: தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு எச்சரிக்கை!

அமெரிக்காவின் போர்நிறுத்த முயற்சிக்கு மத்தியில் போர் தொடுக்க கோரும் இஸ்ரேல்!

அமெரிக்காவின் போர்நிறுத்த முயற்சிக்கு மத்தியில் போர் தொடுக்க கோரும் இஸ்ரேல்!

ஹரின், கெஹெலிய, அத்தாவுல்லா உள்ளிட்டவர்கள் வசிக்கும் வீடுகளின் பல இலட்சம் ரூபாய் மின்சாரக்கட்டணங்கள் செலுத்தப்படவில்லை – தயாசிறி!

செப்டெம்பரில் உயர்த்தப்படும் மின்சார கட்டணம்?

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
கன்னி சதம் அடித்தார் சொனால் தினுஷ!

கன்னி சதம் அடித்தார் சொனால் தினுஷ!

0
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

இலஞ்சம் வாங்கிய நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்குப் பிணை !

0
நாளை முதல் கண்டியில் சிறப்பு போக்குவரத்து, பாதுகாப்பு திட்டம்!

நாளை முதல் கண்டியில் சிறப்பு போக்குவரத்து, பாதுகாப்பு திட்டம்!

0
என்.ஜி.ஓ. சட்ட வரைவிற்கு எதிராக முல்லைத்தீவில் கவனயீர்ப்புப் போராட்டம்: மேலதிக செயலாளரிடம் மகஜர் கையளிப்பு!

என்.ஜி.ஓ. சட்ட வரைவிற்கு எதிராக முல்லைத்தீவில் கவனயீர்ப்புப் போராட்டம்: மேலதிக செயலாளரிடம் மகஜர் கையளிப்பு!

0
ஆன்லைன் மோசடிகள் அதிகரிப்பு; மக்கள் அவதானம்!

வங்கிக் கணக்குகளை குறிவைத்து புதிய மோசடி; மக்களை எச்சரிக்கும் SLCERT! 

0
கன்னி சதம் அடித்தார் சொனால் தினுஷ!

கன்னி சதம் அடித்தார் சொனால் தினுஷ!

2026-08-17
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

இலஞ்சம் வாங்கிய நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்குப் பிணை !

2026-08-17
நாளை முதல் கண்டியில் சிறப்பு போக்குவரத்து, பாதுகாப்பு திட்டம்!

நாளை முதல் கண்டியில் சிறப்பு போக்குவரத்து, பாதுகாப்பு திட்டம்!

2026-08-17
என்.ஜி.ஓ. சட்ட வரைவிற்கு எதிராக முல்லைத்தீவில் கவனயீர்ப்புப் போராட்டம்: மேலதிக செயலாளரிடம் மகஜர் கையளிப்பு!

என்.ஜி.ஓ. சட்ட வரைவிற்கு எதிராக முல்லைத்தீவில் கவனயீர்ப்புப் போராட்டம்: மேலதிக செயலாளரிடம் மகஜர் கையளிப்பு!

2026-08-17
ஆன்லைன் மோசடிகள் அதிகரிப்பு; மக்கள் அவதானம்!

வங்கிக் கணக்குகளை குறிவைத்து புதிய மோசடி; மக்களை எச்சரிக்கும் SLCERT! 

2026-08-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.