மொரிஷியஸிடமிருந்து சாகோஸ் தீவுகளை வாங்கும் திட்டம் ஒன்றை அமெரிக்கா பரிசீலித்து வருவதாக, டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரித்தானியாவை தவிர்த்துவிட்டு, டியாகோ கார்சியாவின் கட்டுப்பாட்டைத் தங்கள் வசம் எடுத்துக்கொள்வதற்காக அமெரிக்க அதிகாரிகள் திட்டம் ஒன்றை வகுத்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடல் தீவுக்கூட்டத்தின் இறையாண்மையை மொரிஷியஸுக்கு விட்டுக் கொடுக்கும் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் முடிவுக்கு மாற்று திட்டங்களை அமெரிக்கா வகுத்துவருகின்றது.
இதில் ஒரு பகுதியாகவே அமெரிக்காவின் இந்த திட்டமும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டியாகோ கார்சியா தீவில் உள்ள அமெரிக்க-பிரித்தானிய கூட்டு இராணுவத் தளத்தை உள்ளடக்கிய இந்த பிராந்தியத்தை பிரித்தானியா விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதில் அமெரிக்க ஜனாதிபதி உறுதியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடலில் டியாகோ கார்சியா தீவு பெற்றுள்ள மூலோபாய முக்கியத்துவம், அதனை அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பிற்கு மிக முக்கியமான இராணுவத் தளமாக மாற்றியுள்ளது.
இந்நிலையில், பிராந்தியப் பாதுகாப்புத் தளமாக அத்தீவின் நிலைத்தன்மையைப் பாதுகாப்பதற்காக அமெரிக்கா பிரித்தானியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.















