• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சிசு செரிய பஸ் சேவை வவுனியாவில் ஆரம்பித்து வைப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/15
in இலங்கை, பிரதான செய்திகள், வட மாகாணம், வவுனியா
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி கற்கும் மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், ‘சிசு செரிய’ பஸ் சேவை வட மாகாணத்தில் ஆரம்பித்து வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வு, இன்று வவுனியாவில் இடம்பெற்றிருந்தது.

குறித்த நிகழ்வானது கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இன்று (15) வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இடம்பெற்றிருந்தது.

வட மாகாணத்தின் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலுள்ள மாணவ, மாணவிகளுக்காக இதுவரை ‘சிசு செரிய’ பஸ் சேவைகள் நடைமுறையில் இருக்கவில்லை.

இந்நிலையில், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சு ஆகியன இணைந்து, முதற்கட்டத்தின் கீழ் வட மாகாணத்தினுள் 20 ‘சிசு செரிய’ பஸ்களை இயக்குவதற்குரிய நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளன.

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர்,

நாடளாவிய ரீதியில் அனைத்துப் பகுதிகளிலும் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துக்காக 200-க்கும் மேற்பட்ட புதிய பஸ்களை ‘சிசு செரிய’ சேவையில் இணைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இதற்கென ஒரு பில்லியன் ரூபாவிற்கு அண்மித்த தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

2005ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘சிசு செரிய’ பஸ் சேவை, இதுவரை வட பகுதி பாடசாலை மாணவர்களுக்குக் கிடைக்கப் பெற்றிருக்கவில்லை எனவும், இதற்கு முன்னர் இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ்கள் ஊடாகவே பொதுப் போக்குவரத்துச் சேவையுடன் இணைந்து மாணவர்களின் போக்குவரத்து மேற்கொள்ளப்பட்டதாகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்காக இச் ‘சிசு செரிய’ பஸ் சேவை நடைமுறைப்படுத்தப்படுவதுடன், இதன்போது மாணவர்களுக்கான போக்குவரத்துப் கட்டணத்தில் பாதி (அரைக்கட்டணம்) மாத்திரமே அறவிடப்படும் என்பதுடன், எஞ்சிய தொகையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும்.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். திலகநாதன், ம.ஜெகதீஸ்வரன், வட மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் எஸ். விமலேஸ்வரன் மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் என உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

blank blank blank

Related

Tags: srilanka newsVavuniya
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; துனிசியாவை 5-1 என்ற கணக்கில் வீழ்த்திய சுவீடன்! 

Next Post

சிலாபம் வைத்தியசாலையில் தாக்குதல்; இரு பாதுகாப்பு அதிகாரிகள் காயம்!

Related Posts

வவுனியா மாவட்டத்திலிருந்து முதன்முறையாக தேசிய அணியில் தடம் பதித்து சாதனை படைக்கும் மாணவர்கள்!
இலங்கை

2026-06-15
பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்தும் மோதி விபத்து – 17 மாணவர்கள் படுகாயம்!

செம்மணியில் இன்றும் சிறுவர்கள் குழந்தையின் என்புகூடுகள் மீட்பு!
இலங்கை

செம்மணியில் இன்றையதினம் கைக்குழந்தையின் உள்ளடங்கலாக 10 என்புக்கூடுகள் அகழ்வு!

2026-06-15
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு
இலங்கை

பொலிஸ் உட்பட 5 மனித கொ*லை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் உட்பட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-06-15
யோஷித, அவரது பாட்டிக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!
இலங்கை

யோஷித ராஜபக்சவின் சீராய்வு மனு நாளை விசாரணைக்கு!

2026-06-15
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!
இலங்கை

புலத்சிங்கள பகுதியில் வீடொன்றிலிருந்து தம்பதியர் சடலமாக மீட்பு!

2026-06-15
Next Post
சிலாபம் வைத்தியசாலையில் தாக்குதல்; இரு பாதுகாப்பு அதிகாரிகள் காயம்!

சிலாபம் வைத்தியசாலையில் தாக்குதல்; இரு பாதுகாப்பு அதிகாரிகள் காயம்!

முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு!

முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு!

மட்டுப்படுத்தப்பட்ட ஹட்டன்–நுவரெலியா பிரதான வீதியூடான போக்குவரத்து!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
வவுனியா மாவட்டத்திலிருந்து முதன்முறையாக தேசிய அணியில் தடம் பதித்து சாதனை படைக்கும் மாணவர்கள்!

வவுனியா மாவட்டத்திலிருந்து முதன்முறையாக தேசிய அணியில் தடம் பதித்து சாதனை படைக்கும் மாணவர்கள்!

0
பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்தும் மோதி விபத்து – 17 மாணவர்கள் படுகாயம்!

பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்தும் மோதி விபத்து – 17 மாணவர்கள் படுகாயம்!

0
செம்மணியில் இன்றும் சிறுவர்கள் குழந்தையின் என்புகூடுகள் மீட்பு!

செம்மணியில் இன்றையதினம் கைக்குழந்தையின் உள்ளடங்கலாக 10 என்புக்கூடுகள் அகழ்வு!

0
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பொலிஸ் உட்பட 5 மனித கொ*லை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் உட்பட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0
யோஷித, அவரது பாட்டிக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

யோஷித ராஜபக்சவின் சீராய்வு மனு நாளை விசாரணைக்கு!

0
வவுனியா மாவட்டத்திலிருந்து முதன்முறையாக தேசிய அணியில் தடம் பதித்து சாதனை படைக்கும் மாணவர்கள்!

வவுனியா மாவட்டத்திலிருந்து முதன்முறையாக தேசிய அணியில் தடம் பதித்து சாதனை படைக்கும் மாணவர்கள்!

2026-06-15
பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்தும் மோதி விபத்து – 17 மாணவர்கள் படுகாயம்!

பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்தும் மோதி விபத்து – 17 மாணவர்கள் படுகாயம்!

2026-06-15
செம்மணியில் இன்றும் சிறுவர்கள் குழந்தையின் என்புகூடுகள் மீட்பு!

செம்மணியில் இன்றையதினம் கைக்குழந்தையின் உள்ளடங்கலாக 10 என்புக்கூடுகள் அகழ்வு!

2026-06-15
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பொலிஸ் உட்பட 5 மனித கொ*லை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் உட்பட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-06-15
யோஷித, அவரது பாட்டிக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

யோஷித ராஜபக்சவின் சீராய்வு மனு நாளை விசாரணைக்கு!

2026-06-15

Recent News

வவுனியா மாவட்டத்திலிருந்து முதன்முறையாக தேசிய அணியில் தடம் பதித்து சாதனை படைக்கும் மாணவர்கள்!

வவுனியா மாவட்டத்திலிருந்து முதன்முறையாக தேசிய அணியில் தடம் பதித்து சாதனை படைக்கும் மாணவர்கள்!

2026-06-15
பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்தும் மோதி விபத்து – 17 மாணவர்கள் படுகாயம்!

பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்தும் மோதி விபத்து – 17 மாணவர்கள் படுகாயம்!

2026-06-15
செம்மணியில் இன்றும் சிறுவர்கள் குழந்தையின் என்புகூடுகள் மீட்பு!

செம்மணியில் இன்றையதினம் கைக்குழந்தையின் உள்ளடங்கலாக 10 என்புக்கூடுகள் அகழ்வு!

2026-06-15
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பொலிஸ் உட்பட 5 மனித கொ*லை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் உட்பட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-06-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.