லண்டன் நிலத்தடி ரயில் வலையமைப்பில் நேற்றைய (24) தினம் வெப்பநிலை கிட்டத்தட்ட 40 டிகிரி செல்சியஸை எட்டியது.
ஜூன் மாதத்தில் இதுவரை பதிவான மிக வெப்பமான நாளாக அன்றைய தினம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஹாம்ப்ஷயரின் கோஸ்போர்ட் (Gosport) பகுதியில் 36.1 டிகிரி செல்சியஸ் என்ற தற்காலிக அதிகபட்ச வெளிப்புற வெப்பநிலை பதிவாகியுள்ளது.
ஒரே நாளில் நான்கு முறை வெப்பநிலை சாதனை முறியடிக்கப்பட்ட நிலையில், 1976-ல் பதிவான 35.6 டிகிரி செல்சியஸ் என்ற முந்தைய அதிகபட்ச வெப்பநிலையை இது முறியடித்துள்ளது என்று தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தீவிர வெப்பம் குறித்து வானிலை முன்னறிவிப்பாளர்கள் பல சுகாதார எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.
இதில் வியாழக்கிழமை வரை தெற்கு இங்கிலாந்தின் பெரும்பகுதியை உள்ளடக்கிய அரிதான சிவப்பு எச்சரிக்கையும் அடங்கும்.
நாடு முழுவதும் நிலவும் கடும் வெப்பம் மற்றும் அதிக ஈரப்பதமான சூழலுக்கு மத்தியில், பல பாடசாலைகளும் அலுவலகங்களும் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.













