இலங்கையில் 2026 ஆம் ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 55 ஆயிரத்தையும் கடந்துள்ளது.
அதன்படி, இவ்வருடத்தில் இதுவரை மொத்தம் 55,406 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அண்மைய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இந்த வருடத்தில் டெங்கு தொடர்பான உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் 32-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,024 புதிய டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்த டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர, நாடு முழுவதும் நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதை இது சுட்டிக்காட்டுவதாகக் குறிப்பிட்டார்.
















