கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் நாளை (04) காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை 12 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அதன்படி, கொழும்பு 01 முதல் கொழும்பு 15 வரையிலான பகுதிகள் மற்றும் பத்தரமுல்லை, பெலவத்தை, ஹோகந்தரை, கொஸ்வத்தை, தலவத்துகொடை, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே, ராஜகிரிய, மிரிஹான, மதிவெல, நுகேகொடை, நாவல, கொலன்னாவை, ஐடிஎச், கொட்டிக்காவத்தை, அங்கொடை, வெல்லம்பிட்டி, ஒருகொடவத்த, கடுவலை, மஹரகம, பொரலெஸ்கமுவ மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் நிறுத்தப்படும்.
முல்லேரியாவ கிரிட் துணை மின்நிலையத்தில் (Grid Substation) மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகளுக்காக, அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின்சார விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதே இந்த நீர் விநியோகத் தடைக்குக் காரணம் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.
எனவே, நீர் விநியோகத் தடை ஏற்படும் காலப்பகுதியில் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் வகையில், அப்பகுதி மக்கள் போதுமான அளவு நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறும் NWSDB அறிவுறுத்தியுள்ளது.













