மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் இரத்தினபுரி, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
காற்று:
காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசும். காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வரை இருக்கும். மன்னார் ஊடாக காங்கேசன்துறையிலிருந்து புத்தளம் வரையிலும், ஹம்பாந்தோட்டை ஊடாக மாத்தறையிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 55 முதல் 65 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.
நாட்டைச் சுற்றியுள்ள ஏனைய கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.
கடலின் நிலை:
மன்னார் ஊடாக காங்கேசன்துறையிலிருந்து புத்தளம் வரையிலும், ஹம்பாந்தோட்டை ஊடாக மாத்தறையிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
நாட்டைச் சுற்றியுள்ள ஏனைய கடல் பகுதிகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக சிலாபத்திலிருந்து பொத்துவில் வரை நீண்டுள்ள கடல் பகுதிகளில் அலைகளின் உயரம் சுமார் 2.0 முதல் 2.5 மீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.













