இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை தொடர்பான விளம்பரங்கள் இடம்பெறுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, நீக்குமாறு மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மெட்டா நிறுவனத்தின் கீழ் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸாப், த்ரெட்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இயங்கி வருகின்றன.
இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான உள்ளடக்கங்களை ஊக்குவிக்கும் விளம்பரங்கள் வெளியிட்டுள்ளது.
இந்த விளம்பரங்கள் குறித்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
அனைத்து விளம்பரங்களையும் உடனடியாக நீக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அடுத்த 7 நாட்களுக்குள் விரிவான விளக்கத்தை அளிக்குமாறு மெட்டா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இணையத்தில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான உள்ளடக்கங்கள் பரவுவதற்கும், ஊக்குவிக்கப்படுவதற்கும் எதிராக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
மேலும், டிஜிட்டல் தளங்கள் விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.














