பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ் (British Grand Prix) வார இறுதியின் முக்கிய ஃபார்முலா 3 (Formula 3) கார் பந்தயம் பிரித்தானியாவின் சில்வர்ஸ்டோனில் (Silverstone) இன்று (05) நடைபெறவுள்ளது.
இதேவேளை ஃபார்முலா 3 (Formula 3) கார் பந்தயத் தொடரின் ஸ்பிரிண்ட் சுற்றில் இரண்டாம் இடத்தைப் பெற்று யெவான் டேவிட் (Yevan David)நேற்று (04) சாதனை படைத்துள்ளார்.
இதற்கமைய, ஃபார்முலா 3 சுற்றொன்றில் இவ்வாறானதொரு சாதனையை நிலைநாட்டிய முதல் இலங்கை வீரராக அவர் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
ஏஐஎக்ஸ் ரேசிங் (AIX Racing) அணிக்காக போட்டியிட்ட யெவன் டேவிட், காம்போஸ் ரேசிங் (Campos Racing) அணியின் உகோ உகோசுக்வு (Ugo Ugochukwu)வுக்கு அடுத்தபடியாக பந்தயத்தை நிறைவு செய்தார்.














