இன்று காலை இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன்போது நல்லையான் வீதி, சில்லாலையை சேர்ந்த சாம் தவராசா (வயது 80) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் வாகனமும் குறித்த முதியவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் மோதி குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது குறித்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது சடலம் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது குறித்து இளவாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.













