காலி, மஹமோதர பகுதியில் புதிய சிறைச்சாலை ஒன்று அமைக்கப்படவுள்ளது.
இந்த சிறைச்சாலை அமைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவிப்பினை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வெளியிட்டுள்ளார்.
சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 54) பிரிவு 2-ன் கீழ் அமைச்சருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
வர்த்தமானியின்படி, இந்தச் சிறைச்சாலை “மஹமோதர சிறைச்சாலை” என்ற பெயரில் அமைக்கப்படவுள்ளது.
இதன் அதிகார வரம்பு நாடு முழுவதையும் உள்ளடக்கியதாக இருக்கும்.












