ஈரானுடனான தற்காலிகப் போர்நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இது இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் ஒரு இராணுவ மோதல் ஏற்படும் சாத்தியத்தை உருவாக்கியுள்ளது.
ஹார்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரானிய எண்ணெயை விற்பனை செய்வதற்கான அனுமதியை அமெரிக்கா இரத்து செய்தது.
அதையடுத்து சில மணிநேரங்களிலேயே, புதன்கிழமை (08) அதிகாலையில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியது.
இதற்குப் பதிலடியாக ஈரான், பஹ்ரைன் மற்றும் குவைத் மீது தாக்குதல்களை நடத்தியது.
இந்த நிலையில் புது அறிவிப்பாக ஈரானுடனான இடைக்கால ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்றும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுடன் எந்தவொரு ஒப்பந்தத்திலும் ஈடுபடவோ அல்லது அவர்களைக் கையாளவோ தான் விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.
அங்காராவில் நடைபெற்ற உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, நேட்டோ (NATO) பொதுச்செயலாளர் மார்க் ருட்டேவுடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசிக் கோட்டிருந்த போது ட்ரம்ப் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது, நேட்டோவில் ஸ்பென்ன் ஒரு மோசமான பங்காளி என்று குறிப்பிட்ட ட்ரம்ப், அந்த நாட்டுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் துண்டிக்குமாறு தனது திறைசேரியின் செயலாளர் ஸ்காட் பெசென்ட்-க்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார்.
அத்துடன், கிரீன்லாந்து விவகாரத்தில் நேட்டோ அமைப்பின் மீதும் தனக்கு அதிருப்தி இருப்பதாகவும் இதன்போது குறிப்பிட்டார்.
















