கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்ளை மீட்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது.
கேரளா மாநிலம் வயநாடு மேப்பாடி அருகே கல்லாடி என்ற இடத்தில் கோழிக்கோடு பகுதிக்கு செல்வதற்கான, சுரங்கப்பாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இங்கிருந்து அகற்றப்பட்ட மண் குவித்து வைக்கப்பட்டதால், அங்கு பெய்த கனமழையின் போது, மண் சரிவு ஏற்பட்டது.
இதில் மண்ணிற்கு அடியில் 20க்கும் மேற்பட்டோர் புதைந்திருக்கலாம் என்று கூறிய நிலையில், நேற்று மாலை வரை 8 பேர் உயிருடனும், 5 பேர் சடலமாகவும் மீட்கப்பட்டனர்.
தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், மோப்பநாய் உதவியுடன் மண்ணில் புதைந்து காணாமல் போனவர்களை தேடி வருகின்றனர்.
20 முதல் 30 அடி உயரம் வரை மண் புதைந்த நிலையில், இன்னும் 10 அடி மட்டுமே மண்ணை அகற்ற வேண்டி உள்ளது.












