• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பல்கலைக்கழக வளாகத்திற்கு முன்பாக இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் எவரும் பங்கேற்கவில்லை!

பல்கலைக்கழக வளாகத்திற்கு முன்பாக இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் எவரும் பங்கேற்கவில்லை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/09
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
69 1
A A
0
30
SHARES
996
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பிலான குற்றச்சாட்டு தொடர்பில் பேராசிரியர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகளை காலத்தை இழுத்தடிக்காது, துரித படுத்த கோரி , பல்கலை முன்றலில் இன்றைய தினம் (09) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கும் தமக்கும் தொடர்பு இல்லை என பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்வுக்கும் அதன் சமூகப் பொறுப்புடமைக்கும் எதிரான சக்திகளால், தேசியத்தின்பால் பற்றுறுதியோடு பயணிக்கும் அனைவரும் கல்வியாளர்கள் குறிவைத்துத் தாக்கப்படும், அவதூறுகளுக்கு ஆளாக்கப்படும் சூழல் திட்டமிட்டு உருவாக்கப்படுவதை யாழ்ப்பாணப் பல்கலை மாணவர் சமூகம் ஆழமாக அவதானித்து வருகிறது.

சட்டரீதியாகக் குற்றச்சாட்டுக்களை முன்னெடுக்காது, சமூக ஊடகப் பரப்பினூடாக அவமதிப்பை உருவாக்கும் பிம்பங்களைக் கட்டமைத்து, சமூக ஊடகப் பதிவர்களே நீதிபதிகளாக உருவாகும் துரதிர்ஷ்டவசமான நிலை தமிழ்ச்சமூகத்தின் பகுத்தறிவுச் சிந்தனைக்கு மாறானதும் எதிரானதுமாகும்.

இது, தமிழ்ச் சமூகத்தின் பொறுப்புமிக்கதும் நிதானமானதுமான ஊடகப் பொறுப்புணர்வைக் கேள்விக்குள்ளாக்குவதுடன், சமூக ஊடகங்களில் நிதானம் தவறிக் கருத்திடுபவர்களின் பின்னால் செல்லும் பரிதாபநிலையை எமது சமூகம் அடையும் ஆபத்தும் அதிகரித்துவருகின்றது.

வெறுமனே மானுட உணர்வுகளைக் கிளறிக் குளிர்காய முற்படும் இந்தத் தீயசக்திகளை பல்கலைக்கழக மாணவர் சமூகம் அடையாளங் கண்டுள்ளதுடன், அதுபற்றிய தெளிவுகளை சமூகத்தின்முன் கொண்டுசெல்லும் முயற்சிகளுக்கு பல்கலைக்கழக மாணவர்கள் உறுதியான ஆதரவைத் தருவார்கள்.

அதேவேளை, சமூக ஊடகங்கள்வழியான அவமதிப்புச் செயற்பாடுகளுக்கு எதிராக, சட்டத்தினதும் நீதியின்பாலானதுமான முன்னெடுப்புக்களால் தம்மீதான அவதூறுகளைக் களைய முற்படும் ஆளுமைகளுக்கு மாணவர் சமூகத்தின் ஆதரவு என்றுமுண்டு என்பதையும் ஆணித்தரமாக முன்வைக்க விரும்புகின்றோம்.

மேலும், பல்கலைக்கழக வளாகத்திற்கு முன்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் எவரும் பங்கேற்கவில்லை என்பதையும், இந்த ஆர்ப்பாட்டத்திற்கும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களுக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என்பதையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியமாக வலியுறுத்துகின்றோம்.

இவ்வாறான போராட்டங்கள் வெவ்வேறு அரசியல் மற்றும் தனிப்பட்ட நலன்களுடன் முன்னெடுக்கப்படுவவை என்பதையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் சுட்டிக்காட்டிகாட்டுகின்றது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related

Tags: Jaffnasrilanka newsUniversity of Jaffna
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதியின் ஆதரவுடன் மாவட்ட செயலாளர்கள் மாநாடு!

Next Post

மாலபே சட்டவிரோத மதுபான ஆலை: இந்தியாவில் இருந்து போலி ஸ்டிக்கர்கள்!

Related Posts

நரகமும் எனக்கு தலை வணங்கும்; டாக்டர் டூமாக மிரட்டும் ரொபர்ட் டவுனி ஜூனியர்!
சினிமா

நரகமும் எனக்கு தலை வணங்கும்; டாக்டர் டூமாக மிரட்டும் ரொபர்ட் டவுனி ஜூனியர்!

2026-08-15
தெஹிவளை கொலை சதித்திட்டத்தை முறியடித்த மேல் மாகாண குற்றப்பிரிவு!
இலங்கை

நாவலவில் நடத்தப்பட்ட தாக்குதலில் நபரொருவர் உயிரிழப்பு!

2026-08-15
சிறையிலிருந்து தப்பிய 700-க்கும் மேற்பட்டோர் இன்னும் மாயம்!
இலங்கை

சிறையிலிருந்து தப்பிய 700-க்கும் மேற்பட்டோர் இன்னும் மாயம்!

2026-08-15
தெல்லிப்பழை  துர்க்கை அம்மனுக்கு இன்று கொடியேற்றம்
இலங்கை

தெல்லிப்பழை துர்க்கை அம்மனுக்கு இன்று கொடியேற்றம்

2026-08-15
3.1 கிலோ சிறுநீரக கல்; திருகோணமலையில் அதிர்ச்சி சாதனை!
இலங்கை

3.1 கிலோ சிறுநீரக கல்; திருகோணமலையில் அதிர்ச்சி சாதனை!

2026-08-15
இந்தோனேசிய நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழப்பு!
உலகம்

இந்தோனேசிய நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழப்பு!

2026-08-15
Next Post
மட்டுவில் 8 பேர் கைது

மாலபே சட்டவிரோத மதுபான ஆலை: இந்தியாவில் இருந்து போலி ஸ்டிக்கர்கள்!

பெருந்தொகையான  மதிப்புள்ள சட்டவிரோத போதைப்பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள்  பறிமுதல் !

பெருந்தொகையான மதிப்புள்ள சட்டவிரோத போதைப்பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் பறிமுதல் !

திடீரென கையகப்படுத்தப்பட்ட சொத்து குறித்து தகவல் தெரிவிக்குமாறு காவல்துறை கோரிக்கை!

திடீரென கையகப்படுத்தப்பட்ட சொத்து குறித்து தகவல் தெரிவிக்குமாறு காவல்துறை கோரிக்கை!

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.