டெங்கு நோயின் தாக்கத்தினால் மேல் மாகாணம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தையும் நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் இதுவரை நாடு முழுவதும் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 66,064 ஆக உள்ளது.
இதற்கிடையில், டெங்கு தொடர்பாக பதிவாகியுள்ள உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்று (10) நிலவரப்படி 46 ஆக உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டில் கம்பஹா மாவட்டத்தில் 13,556 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 13,355 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 4,699 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 4,425 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும், குறிப்பிட்டுள்ளது.












