களுத்துறை மாவட்டச் செயலகத்தின் தரைத்தளத்தில் உள்ள மின் அமைப்பில் இன்று (13) காலை சுமார் 8:30 மணியளவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் அங்குள்ள உபகரணங்கள் சேதமடைந்தன.
எனினும், இச்சம்பவத்தினால் உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ எதுவும் ஏற்படவில்லை.
களுத்துறை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் சம்பவ இடத்திற்குத் தீயணைப்பு வாகனங்களை அனுப்பி, தீயை வெற்றிகரமாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதற்கிடையில், இச்சம்பவத்தைத் தொடர்ந்து களுத்துறை மாவட்டச் செயலகத்திற்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.














